அனிருத், தனுஷ் கூட்டணியில் பிரபல நடன இயக்குனர்
தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக இணைந்துள்ளார்.
மேலும் பாடல் காட்சியின்போது தனுஷுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜானி மாஸ்டர் கூறியுள்ளதாவது, தனுஷின் 44வது படமான திருச்சிற்றம்பலம் படத்தில் அவருடன் இணைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனிருத் இசையில் தனுஷின் துள்ளலான நடனத்தை காண தயாராக இருங்கள். இந்த வாய்ப்பை வழங்கிய ஜவஹர் மற்றும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
No comments