தனுஷ் என்னுடைய மகன் தான்! மறுபடியும் பரபரப்பாகும் வழக்கு :
நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் தான் என்று கதிரேசன் தம்பதி சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தனர். உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.
இந்நிலையில் தனுஷ் தரப்பில் அளிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் யாவும் போலியானது என கதிரேசன் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் புதிதாக தனுஷ் மீது புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நவம்பர் 11ல் விசாரிப்பதாக வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கொடுக்கப்பட்டது போலியான ஆவணமாக இருந்தால் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் என்னுடைய மகன் தான்! மறுபடியும் பரபரப்பாகும் வழக்கு :
Reviewed by Dhanush
on
14:33
Rating:
No comments